Breaking
Thu. Nov 14th, 2024

இலங்கை – இந்­திய பொரு­ளா­தார மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்­பந்தம் தொடர் பில் இரு நாட்டு அதி­கா­ரிகள் மட்டப் பேச்சு வார்த்­தை­க­ளுக்­காக இந்­திய உயர் மட்ட குழு நாளை வியா­ழக்­கி­ழமை இலங்கை வரு­கின்­றது.

இரு நாட்டு அதி­கா­ரி­களின் பங்­குப்­பற்­ற­லுடன் வெள்­ளிக்­கிழமை கொழும்பில் உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள இலங்கை, – இந்­திய கூட்டு ஒப்­பந்தம் தொடர்­பான செய­ல­மர்வு இடம்­பெ­ற­வுள்­ளது.

இலங்கை, – இந்­திய கூட்டு ஆணைக்­கு­ழுவின் ஊடாக கலந்­தா­லோ­சிக்­கப்­பட்ட இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான பொரு­ளா­தாரம் மற்றும் தொழில் நுட்­பத்தை மையப்­ப­டுத்­திய கூட்டு ஒப்­பந்­தத்­திற்கு இணக்கம் காணப்­பட்­டது. இந்த ஒப்­பந்தம் தொடர்பில் பல கட்ட பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதி­கா­ரிகள் மட்­டத்­தி­லான பேச்­சு­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

இத­ன­டிப்­ப­டையில் இலங்­கைக்கு நாளை வியா­ழக்­கி­ழமை விஜயம் மேற்­கொள்ள வுள்ள இந்­திய உயர் மட்ட அதி­கா­ரிகள் குழு நாட்டின் வர்த்­தகம் மற்றும் தொழில் நுட்ப துறை­களை சார்ந்­த­வர்கள் முக்­கி­யஸ்­தர்­க­ளுடன். வெள்­ளிக்­கி­ழமை கொழும்பில் இடம்­பெ­ற­வுள்ள செயலமர்வில் உத்தேச ஒப்பந்தம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படும் என எதிர் பார்க்கப்படுகின்றது.

By

Related Post