Breaking
Sun. Dec 22nd, 2024

ஐக்கிய அரபு அமீரகத்தில் மிராஜ் தினம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அன்று பார்க்கிங் கட்டணம் இல்லை என துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த நடைமுறை துபாய் மீன் மார்க்கெட் மற்றும் துபாய் மாநகராட்சி பல அடுக்கு வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு பொருந்தாது. அங்கு வழக்கம் போல் கட்டணம் செலுத்த வேண்டும்.

அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து துபாய்க்கு வருபவர்களின் நலனை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாக துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணைய வாடிக்கையாளர் சேவை மையத்தின் இயக்குனர் அகமது ஹசன் மகபூப் தெரிவித்தார். இந்த முடிவு பொதுமக்களுக்கு மிகவும் பயனளிக்கும். வாகன போக்குவரத்து இலகுவாக நடைபெற உதவும். மக்கள் அதிகமாக கூடுவார்கள் என்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அனுமதிக்கப்படாத இடங்களிலும் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டார்.

Related Post