Breaking
Fri. Nov 15th, 2024

நாட்டில் தற்­போது அதி­க­ரித்து வரும் வீதி­ வி­பத்­துக்கள் கார­ண­மாக நாௌான்றுக்கு ஏழு பேர் உயி­ரி­ழப்­ப­தாக பொலிஸ் போக்­கு­வ­ரத்து பிரிவின் தலை­மை­யகம் வெளியிட்ட அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அத்­தோடு நா.ௌான்றுக்கு 101 வீதி விபத்­துக்கள் பதி­வாகி வரு­வ­தையும் ஒருங்கே சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

நாட­ளா­விய ரீதியில் கடந்த ஆண்டில் மாத்­திரம் 36,894 வீதி­வி­பத்­துக்­களில் 2,771 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். 7,719 பேர் பார­தூ­ர­மான காயங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். இது­வரை காலங்­களில் கடந்த ஆண்­டான 2015 ஆம் ஆண்­டி­லேயே அதி­க­மான வீதி விபத்­துக்கள் ஏற்­பட்­டுள்­ள­தாக வர­லாற்றில் பதி­வா­கி­யுள்­ள­தா­கவும் பொலிஸ் போக்­கு­வ­ரத்து பிரிவின் தலை­மை­யகம் வெளியிட்ட அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் தொடக்கம் நவம்பர் 31 ஆம் திகதி வரையில் இடம்­பெற்ற விபத்­துக்­களில் மோட்டார் சைக்கிள் விபத்­துக்கள் 9,329 என்ற எண்­ணிக்­கையில் அதி­க­மாக பதி­வா­கி­யுள்­ளன. இத­னை­ய­டுத்து, முச்­சக்­கர வண்­டிகள் மூலம் 6,301 விபத்­துக்கள் பதி­வா­கி­யுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

அதி­க­மான வீதி விபத்­துக்­களை ஏற்­ப­டுத்­திய சார­திகள் 31 வய­திற்கும் 35 வய­திற்கும் இடைப்­பட்­ட­வர்­க­ளாக இருப்­ப­தோடு இவர்கள் மூலம் 5,349 விபத்­துக்கள் பதி­வா­கி­யுள்­ளன. அதிக விபத்­துக்­க­ளுக்கு 31-35 வரையான சாரதிகளே பொறுப்புக் கூறவேண்டியவர்கள் எனவும் இவர்களால் ஏற்பட்ட விபத்துக்கள் 5349 ஆக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

By

Related Post