Breaking
Tue. Dec 24th, 2024

நாவிதன்வெளி இளைஞர் சம்மேளனத்தின் புதிய தலைவராக ஊடகவியலாளர் எம்.முஹம்மட் ஜபீர் நேற்று (11) ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முஸ்லிம் இளைஞர் ஒருவர் நாவிதன்வெளி இளைஞர் சம்மேளனத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை இதுவே முதல் முறையாகும். 

நாவிதன்வெளி இளைஞர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ரீ.சுதன் என்பவர் மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டமையினால் அவருடைய ஏனைய பதவிகளையும் வகித்து அதன் பணிகளை செய்வதிலுள்ள வேலைப்பளு காரணமாக நாவிதன்வெளி இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் பதவியிலிருந்து பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான பொதுக் கூட்டம் இன்று (11) நாவிதன்வெளி பிரதேச செயலக கலாச்சார மத்திய நிலையத்தில் இளைஞர் சேவை அதிகாரி என். ஜெயராஜ் தலைமையில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் புதிய தலைவராக ஊடகவியலாளர் எம்.முஹம்மட் ஜபீர் தெரிவுசெய்யப்பட்டார்.

இத்தெரிவின் மூலம் நாவிதன்வெளி இளைஞர் சம்மேளனத்தின் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் இளைஞர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். நாவிதன்வெளி பிரதேசத்தில் தமிழ் பெரும்பான்மை மக்கள் இருந்தும் இப்பிரதேச இளைஞர்கள் மத்தியில் இன நல்லுறவைப் பேணும் வகையில் இத்தெரிவு இடம்பெற்றுள்ளமையினால் குறித்த துறைசார்ந்த அதிகாரிகளுக்கு பிரதேச முஸ்லிம் இளைஞர்கள் தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

By

Related Post