Breaking
Tue. Dec 24th, 2024

– எம்.எம்.ஜபீர் –

நாவிதன்வெளி பிரதேசத்தில் புனித ரமழான் மாதம் மற்றும் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு மின் விளக்குகள் பொருத்தும் பணி மற்றும் திருத்தும் நவடிக்கைகளை பிரதேச சபை உழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

நாவிதனவெளி பிரதேச சபை செயலாளர் எம்.ராமக்குட்டியின் பணிப்புரைக்கு அமைவாக கடந்த காலங்களில் அதிகமான பிரதேசங்களில் மின் விளக்குகள் பொருத்தப்படாமல் காணப்பட்ட பிரதேசங்கள் இனங்காணப்பட்டு புதிதாக மின் விளக்குகள் பொருத்தும் வேலைத்திட்டம் தற்போது நடைபெற்றுவருகின்றது.

கடந்த காலங்களில் பிரதேச சபையிடம் சமூக தொண்டு அமைப்புக்கள் மற்றும் பிரதேச மக்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கவணத்தில் கொண்ட பிரதேச சபை செயலாளர் இவ்வேலைத்திட்டதினை பிரதேசத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் கடமைகளை மக்களுக்கு வழங்குவதாக பிரதேச அமைப்புகள் நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர் எம்.ராமக்குட்டிக்கு நன்றிகளை தெரிவிக்கின்றனர்.

இதனை நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர் எம்.ராமக்குட்டியின் கண்கானிப்பின் கீழ் பிரதேச சபை உழியர்களான ஏ.எல்.ஜூனூட், எஸ்.அல்பிரட் மற்றும் ஏனைய உழியர்களினால் முன்னெடுத்து வருகின்றனர்.

By

Related Post