Breaking
Sun. Jan 12th, 2025

-ஊடகப்பிரிவு-

நாவிதன் வெளி பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்தில் போட்டியிடும் சென்றல் கேம்ப் வட்டார வேட்பாளர்களை  ஆதரித்து இன்று மாலை (20) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்,  அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக உறுப்பினர்களான முன்னாள் ஸ்தாபகத் தவிசாளர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன், மற்றும் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹஸன் அலி ஆகியோரும் பங்கேற்றனர்.

முன்னாள் அமைச்சர் சேகு  இஸ்ஸதீன் தமது கட்சிகளில் இணைந்து கொண்டதாக சில முஸ்லிம் கட்சிகள், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும், போஸ்டர்களை ஒட்டியும் போலிப்  பிரச்சாரங்களை மேற்கொண்டிருக்கும் நிலையில், வேதாந்தி இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

Related Post