நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மனுக்கள் இன்று (9) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அரசியல் அமைப்பிற்கு விரோதமாகவும், சட்டத்திற்கு முரணான வகையிலும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டதாக குறிப்பிட்டு பேராசிரியர் காலோ பொன்சேகா மற்றும் எல்லே குணவங்ச தேரர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களே இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
புதிய அரசாங்கம் ஆட்சியேற்ற பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் மூலம் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.