நிந்தவூரின் கடற்கரையை அண்டிய பிரதேங்களில் அவசரகால அடிப்படையில் சிரமதானம் மற்றும் புனரமைப்புப்பணிகள் இன்று (21) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிரின் தலைமையில் இடம்பெற்றது
நாளாந்தம் தங்களின் பொழுதுபோக்கை கழிப்பதற்காக வெளியூர் மற்றும் உள்ளூர் மக்கள் பெருந்திரளாக நிந்தவூர் கடற்கரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
இது புனித ஹஜ் பெருநாள் காலம் என்பதால் பொழுதுபோக்கிற்காக வருகைதரும் மக்களின் தொகை அதிகரித்து காணப்படுகிறது. இதன்போது ஏற்படும் வாகன நெரிசல் மற்றும் விபத்துக்களை குறைக்கும் நோக்கிலும் வருகைதரும் மக்களின் சுகாதார நலன் கருதியுமே, தவிசாளர் அவர்களால் குறித்த செயல்திட்டம் உடனடியாக செயற்படுத்தப்பட்டுள்ளது.
பிரதேச சபை ஊழியர்களின் பங்குபற்றுதலோடு இடம்பெற்ற இப்பணிகளின்போது, நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.அஸ்ரப், எம்.எம். சம்சுதீன், எம்.எல்.ஏ மஜீத், ரியாஸ் ஆதம் (LLB) மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
-முர்ஷிட்-