நிந்தவூர் பிரதேசத்தில் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்து கொண்டிருப்பதனை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு அங்கமாக, நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில், இன்று (28) நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
நிந்தவூர் பிரதேச பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள், நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
இதன் போது, வடிகான்களை துப்புரவு செய்வது பற்றியும், ஏனைய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
டெங்குவை கட்டுப்படுத்துவதற்காக நிந்தவூர் பிரதேச சபையும், பொதுச் சுகாதார பணிமனையும் கூட்டாகச் செயற்படுவதற்கு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.