Breaking
Sun. Dec 22nd, 2024

-முர்ஷிட் முஹம்மத்-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை தலைமையிலான நாடளாவிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக, மகளிருக்கான கூட்டமும், நிந்தவூர் பிரதேச மகளிர் அணித் தலைவிக்கான நியமனம் வழங்கும் நிகழ்வும், நிந்தவூரின் மக்கள் காங்கிரஸின் மக்கள் பணிமனையான அமைச்சர் முஸ்தபா லேண்டில் நேற்று (30) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை, மக்கள் காங்கிரஸின் தேசிய சுகாதாரத்துறை பொறுப்பாளரும், நிந்தவூர் அமைப்பாளருமான டாக்டர். பரீட் மற்றும் அக்கரைப்பற்று மத்தியகுழுவின் தலைவர் மற்றும் செயலாளர் உட்பட பலரும் கலந்துசிறப்பித்தனர்.

இங்கு உரையாற்றிய டாக்டர் பரீட்,

நிந்தவூரைப் பொறுத்தவரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெருமளவான சேவைகளை செய்துள்ளது. உள்ளக வீதி அபிவிருத்தி, வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள், பெண்களுக்கான தையல் பயிற்சி நிலையம் உள்ளிட்ட பல சேவைகள் அவற்றில் அடங்கும். இன்னும் பல சேவைகள் தேர்தல் காலம் என்பதால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரித்தார்.

அத்துடன், குறுகியகால அழைப்பில் நூற்றுக்கணக்கான மகளிர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related Post