Breaking
Mon. Dec 23rd, 2024

செங்கல் உற்பத்தியாளர்களான நீங்கள் நாட்டின் உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகளில் பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றீர்கள், அதேபோல நமது பிள்ளைகளின் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு, உமி மற்றும் சாம்பல் போன்ற கழிவுகளினால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தங்களது உற்பத்தித் தளங்களை மாற்றியமைத்து உற்பத்தியில் ஈடுபட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார்.

நிந்தவூர் தெற்கு செங்கல் உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கத்தின் மாதாந்த கூட்டம் அதன் தலைவர் ஹாரூன் அவர்களின் தலைமையில் அரசியடித் தோட்டத்தில் நேற்று இரவு (01) இடம்பெற்றது.

இதன்போது அதிதியாக கலந்துகொண்டு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களின் வாழ்வாதாரத் திட்டத்தின்கீழ், சங்க உறுப்பினர்கள் (26) அனைவருக்கும் வீல்பரோ மற்றும் மண்வெட்டிகளை வழங்கி வைத்து பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன தொழிற்துறை வளர்ச்சியானது பாரம்பரிய உற்பத்தி முறையை கையாளும் செங்கல் உற்பத்தி போன்ற தொழில் துறைகளுக்கு பாரிய சவாலாக அமையப்பெற்றுள்ளமை நாம் அனைவரும் அறிந்ததே ஆனாலும் அதற்கும் ஈடுகொடுக்க கூடியவாராக நவீன உற்பத்திச் சாதனங்களையும் பாரிய இயந்திரங்களையும் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு பெற்றுக்கொடுத்து செங்கல் உற்பத்தி துறையை அபிவிருத்தி அடையச்செய்வதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்கள் ஆர்வம் கொண்டுள்ளமை அவரோடு பேசும்போது எனக்கு தெரிவந்தது. இறைவனின் துணையுடன் எதிர்காலத்தில் அவற்றையும் பெற்றுத்தர முயற்சிக்கிறேன் எனத் தெரிவித்தார்.

இன்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்களான எம்.எம் சம்சுதீன், ஏ.அஸ்பர், எம்.எல்.ஏ மஜீத் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

-முர்ஷிட்-

Related Post