Breaking
Fri. Jan 10th, 2025
 -ஊடகப்பிரிவு-
நிந்தவூர் பிரதேச சபையை முதன்முறையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
இன்று மாலை (27) நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற முதலாவது அமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளதுடன், சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த அஸ்ரப் தாஹிர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். பிரதித் தவிசாளராக
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சுலைமான் லெப்பை ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட முக்கியஸ்தர்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முடிவை அடுத்தே, நிந்தவூர் பிரதேச சபையில் இந்தக் கூட்டு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post