Breaking
Tue. Mar 18th, 2025
தேசிய மட்டத்திலான கபடி சுற்றுப் போட்டியில், சம்பியன் பட்டத்தை சுவீகரித்த அம்பாறை, நிந்தவூர் மதீனா விளையாட்டுக்கழக கபடி அணியினருக்கு நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் அஷ்ரப் தாஹிர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,
 
“இலங்கை தேசிய கபடி சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட, தேசிய கபடி சம்பியன்ஷிப் போட்டியில், அம்பாறை மாவட்டம் சார்பில் பங்குபற்றிய நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழக கபடி அணி, நேற்று முன்தினம் (10) கொழும்பில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் வெற்றியீட்டி, தங்கப்பதக்கம் வென்ற செய்தி அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
 
அதேபோன்று, கடந்த 2021 ஆம் ஆண்டில், நிந்தவூர் பிரதேச இளைஞர், யுவதிகள் மற்றும் சிறார்கள் பலர், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலும் சாதனைகளை நிலைநாட்டி, பதக்கங்களையும் பரிசில்களையும் சான்றிதழ்களையும் வென்றுள்ளனர்.
 
அவர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது எதிர்காலம் பிரகாசமாக அமைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்” என்று கூறினார்.

Related Post