விளையாட்டுக் கழகங்கள் விளையாட்டோடு மட்டும் நின்றுவிடாமல் கல்வி, சமூக மற்றும் சுற்றுச்சூழல் அபிவிருத்தி தொடர்பிலும் செயற்படுவதோடு அதன் அங்கத்தவர்களான இளைஞர்கள், தங்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார்.
நிந்தவூர் ஸ்டார் ஸபா விளையாட்டுக்கழகத்தின் பொது கூட்டமும் விசேட கலந்துரையாடல் நிகழ்வும், நிந்தவூர் பிரதேச சபையின் அரசடிநகர் வட்டார உறுப்பினர் MLA மஜீட் அவர்களின் காரியாலயத்தில் அண்மையில் (08) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசும் போதே, தவிசாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அத்துடன், ஸ்டார் ஸபா கழகத்தினுடைய எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் நிந்தவூரின் பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி தொடர்பில், விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், கழகத்தினுடைய சகல நடவடிக்கைகளுக்கும் பிரதேச சபை தம் அதிகாரத்திற்கு உட்பட்ட ரீதியில் பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என தவிசாளர் உறுதியளித்திருந்தார்.
ஸ்டார் ஸபா விளையாட்டுக் கழகமானது முழு நிந்தவூரிலும் எதிர்வருகின்ற காலங்களில் பிரதேச சபையின் செயற்பாடுகளுக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்புக்களை வழங்கும் என, புதிதாக தெரிவு செய்யப்பட்ட கழகத்தின் இடைக்கால நிர்வாக சபையினர் உருதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.