வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒரு இலட்சம் டொலர் நிதியுதவியை நியூஸிலாந்து வழங்கியுள்ளதாக தொலைத் தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு கூறியுள்ளது.
அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவின் வேண்டுகோளுக்கமைய இந்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.
நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர் மியுரி மெக்கலி இலங்கை உயர் ஸ்தானிகர் ஊடாக இந்நிதியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த நிதியை வெள்ளத்தினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவி வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் என்று தொலைத் தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு கூறியுள்ளது.
அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், பங்களாதேஷ் போன்ற நாடுகள் ஏற்கனவே இலங்கைக்கு நிதி உதவி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.