Breaking
Sun. Dec 22nd, 2024

இலங்கையிலுள்ள 25 நிர்வாக மாவட்டங்களுடன் 26 ஆவது நிர்வாக மாவட்டமாக ஒலுவில் மாவட்டத்தை பிரகடனப்படுத்துமாறு அரசிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக அக்கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

அம்பாறையின் சமூக பொருளாதார அரசியல் தொடர்பான கலந்துறையாடல் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றபோதே அவர் இதனைக்கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பல்வேறு பரிந்துரை களை அரசிடம் முன்வைத்துள்ளது. அவற்றில் ஒன்றே ஒலுவில் மாவட்டப் பிரகடனம்.

காணி, கல்வி,  புதிய அரசியல் யாப்புத் திருத்தம் உள்ளிட்ட விடயங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தியுள்ளதுடன் அவை தொடர்பான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது.

காணிப் பிரச்சினையானது முஸ்லிம் சமூகத்துக்குப் பாரிய பிரச்சினையாக இருப்பதுடன் அதைத் தீர்பதற்கான நடவடிக்கைகளை எமது கட்சி எடுத்துள்ளது.முஸ்லிம் சமூகத்துக்காக எமது தலைமை அர்ப்பணிப்புடன் செயபடுகின்றது.இந்த சமூகத்துக்கு எங்கு அநீதி இழைக்கப்பட்டாலும் , அதனை தட்டிக்கேற்பதுடன்.அதற்காகக் குரல் கொடுக்கும். நாம் சார்ந்த மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அனைத்து சவால்களையும் சந்திப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். எனவே எதிர்காலத்தில் எமது சமூகத்தின் காணி மற்றும் ஏனைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஒன்றுபட்டு பயணிப்போம்-என்றார்.

Related Post