Breaking
Mon. Dec 23rd, 2024
கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகைக்கான பொருட்கள் இத்தாலியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அரசாங்க தலைவரின் பாதுகாப்பிற்கு பதுங்கு குழி அவசியமென்றாலும், நிலக்கீழ் அதிசொகுசு மாளிகை நிர்மாணிப்பதற்கு பல கோடி செலவு செய்யப்பட வேண்டுமா என்ற கேள்வியொன்று உள்ளதென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதுங்கு குழுயொன்றினை அமைத்திருந்தால் எந்த விதமான பிரச்சினையும் கிடையாது. நாட்டின் தலைவரை பாதுகாப்பதற்கு பதுங்கு குழியொன்று மிகவும் அவசியம்.

எனினும் அங்கு பதுங்கு குழி அமைக்கப்படவில்லை இத்தாலியில் இருந்து பொருட்கள் கொண்டு வந்து மாளிகையொன்று நிர்மாணிக்கப்படுவது அவசியமா? இவை அனைத்து அவசியமற்ற செலவுகள் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.

By

Related Post