Breaking
Thu. Dec 26th, 2024

பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய நேற்று இரவு இவர் யாழ் புறப்பட்டுச் சென்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழில் நேற்று ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் இதுவரை 130 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புங்குடுத்தீவில் பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான சந்தேகநபர்களை யாழ் நீதிமன்றத்துக்கு கொண்டு வந்த வேளை அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post