Breaking
Mon. Dec 23rd, 2024
அன்பிற்கும் கண்ணியத்திற்கும் உரிய உலமாக்களே, மஸ்ஜிதுகளின் நிர்வாகிகளே சமூகத்தின் சிவில் தலைமைகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரமதுல்லாஹி வபரகாதுஹு,
நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் கராணமாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நேசக் கரம் நீட்டி உதவி உபகாரம் செய்வதற்காக கடந்த ஓரிரு நாட்களாக உங்கள் ஊர்களிலும் மஹல்லாக்களிலும் நீங்கள் நிவாரண் உதவிகளை சேகரித்து அவற்றை முறையாக உரியவர்களிடம் கொண்டு சேர்க்கவென இதய சுத்தியுடன் மேற்கொள்ளும் அத்தனை முயற்சிகளுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நிறைவாக கூலி தருவானாக.!
அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபையால் கடந்த வெள்ளிக்கிழமை அகில இலங்கை ஜம்மியத்துல் உலாமா தலைமையகத்தில் ஒன்று கூடிய இலங்கையில், அகில இலங்கை ஜம்மியாயதுல் உலமா தேசிய ஷூரா சபை, இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் உற்பட முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் இஸ்லாமிய நிறுவனங்கள் மற்றும் தொண்டர் நிறுவனங்கள் இணைந்து நிவாரண ஒருங்கிணைப்பு மத்திய நிலையமொன்றை (RCC ) RELIEF COORDINATING CENTRE – நிறுவியமை எமது சமூக மற்றும் தேசிய வாழ்வில் மகத்தான ஒரு மைல் கல்லாகும்.
அனர்த்த நிவாரண முகாமைத்துவ நடவடிக்கைகளை திட்டமிட்ட முறையில் விரயங்களும் முறைகேடுகளுமின்றி கட்டம் கட்டமாக மேற்கொள்வதற்காக பல்வேறு நிபுணர் மற்றும் தொண்டர் குழுக்கள் இரவு பகலாக காரியாலய மற்றும் களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டின் பல பாகங்களிலும் பாதிப்புற்றுள்ள மக்கள் சகலரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரையிலான சேவைகளை மாத்திரமன்றி புனித ரமழானையும் கருத்தில் கொண்டு திட்டமிட்ட அடிப்படையில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத் தன்மையுள்ள தன்னார்வ சேவைகளில் (RCC ) நிவாரண ஒருங்கிணைப்பு மத்திய நிலையம் மேற்கொண்டு வருகின்றது.
சுமார் 100 தன்னார்வப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக முகம்களிலன்றி நண்பர் உறவினர் வீடுகளை தங்கியுள்ள ஆயிரக்கணக்கான உறவுகளின் தரவுகளை திரட்டிக் கொண்டிருக்கும் அதேவேளை நூற்றுக் கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் முதலாம் இரண்டாம் கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர், மூன்று வேளையும் சமைத்த உணவு விநியோகத்தை உறுதி செய்தல், உலருணவுப் பொதிகளை விநியோகித்தல், மருத்துவ முகாம்களை நடத்துதல், வெள்ள நீர் வடியும் இடங்களில் துப்புரவுப் பணிகளில் ஈடுபடல் என இன்னோரன்ன சேவைகள் இடம் பெறுகின்றன.
மக்களை மீளக் குடியமர்து முன்னர் வீடுகளிளை துப்பரவு செய்தல், மின்னினைப்புக்களை சரிபார்த்தல், பழுதடைந்த பாவனைக்குதவாத பொருட்களை தளவாடங்களை, கழிவுகளை அகற்றுதல் என பல்வேறு சேவைகளிற்கு அரசினது ஒத்துழைப்பை பெறுவதோடு எம்மால் இயன்ற சேவைகளை செய்ய வேண்டியுள்ளது.
குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கு, சீருடைகள், புத்தகங்கள், புத்தகப் பைகள், காலணிகள் அப்பியாசப் புத்தகங்கள் என எம்மால் இயன்றவற்றை நாம் பெற்றுக் கொடுத்தல் கட்டாயமாகும், அதற்கான ஏற்பாடுகளும் நடக்கின்றன.
அந்த வகையில் தொழில்நுட்ப சேவைகளை, உபகரணங்களை, நிபுணத்துவங்களை வழங்க முன்வரும் அமைப்புக்களும் நிவாரண மத்திய நிலையத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
உளர் உணவுப் பொதிகள் மாத்திரமன்றி தேவைப் படுகின்ற ஆடைகள், மருந்து வகைகள், துப்பரவுஅங்கிகள், அபாயாக்கள், கப்டான்கள், உள்ளாடைகள் என அத்தியாவசிய பொருட்களையும் விநியோகம் செய்ய வேண்டியுள்ளது.
இந்த அழகிய ஒருங்கிணைப்புப் பொறிமுறையை பலப்படுத்துவதும் பாதுகாப்பதும் சமூகத்தின் கடமையாகும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, மத்திய நிலையம், மாவட்ட செயலாளர்கள், உள்ளோர்ரட்சி அமைப்புக்கள் கிராம சேவகர்கள் என அரச யந்திரத்தின் முழுமையான ஒத்துழைப்பை பெறுவதற்கான அங்கீகரங்களுடன் எங்கள் நிவாரண ஒருங்கிணைப்பு மத்திய நிலையம் பணிகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இங்கு எந்தவொரு அமைப்புக்களினதோ, தனியாட்களினதோ, இயக்கங்களினதோ அரசியல் குழுக்களினதோ அடியளங்களுக்கோ, விளம்பரங்களிற்கோ எத்தகைய முக்கியத்துவமும் வழங்கப்படுவதில்லை, அதேபோல் களத்தில் பணியில் உள்ள அவ்வறான செயற்பாட்டாளர்களின் சுதந்திரத்தில், நடவடிக்கைகளில் தலையீடுகள் மேற்கொள்ளப் படுவதுமில்லை.
இதுவரை நீங்கள் உங்கள் ஊர்களிலும் மஹல்லாக்களிலும் சேகரித்துள்ள நிவராண உதவிகளை எமது சமூகத்தின் ஒருங்கிணைந்த நிவாரண சேவைகள் போறிமுறையூடாக விநியோகம் செய்வதற்கு முன்வருமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நீங்கள் தனிப்பட்ட முறையில் குறித்த ஒரு பிரதேசத்தில் உங்கள் பணிகளை சேவைகளை நேரடியாகவே வழங்க விரும்பின் உங்கள் பிரதிநிதிகள் எமது அனர்த்த நிவாரண மத்திய நிலையத்தின் வழிகாட்டல்களை பெற்றுக் கொண்டால் ஏனைய களப்பணியில் உள்ள தொண்டர் அமைப்புக்களின் சேவைகளை திட்டமிட்டுக் கொள்ளவும் முடியும்.
நிவாரண ஒருங்கிணைப்பு மத்திய நிலையம் கொழும்பு 10 இல் அமைந்துள்ள ஆகில இலங்கை ஜம்மியாய்துல் உலமா தலைமையகத்தில் அமைந்துள்ளது,
அவசர அழைப்பு இலக்கம் 0117-490415
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்,
நிவாரண பணிக்குழுத் தலைவர்
தேசிய ஷூரா சபை
(0777634134)

By

Related Post