Breaking
Mon. Dec 23rd, 2024

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கடும் மழைவீழ்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ள அவசர நிலைமைகளுக்கு முகம்கொடுக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலுக்கமைய பாதிக்கப்பட்ட பகுதிகளில் மே மாதம் 15 ஆம் திகதியிலிருந்து இராணுவத்தினர் பல்வேறு நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட கொடூரமான மண்சரிவில் சிக்கியவர்களை நிவாரண மற்றும் மீட்கும் பணிகளில் 58 ஆவது படைப்பிரிவின் 300 ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் (இலங்கை சிங்க ரெஜிமண்ட் மற்றும் 8 விஜயபாகு) மற்றும் கொமாண்டே படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் 53 பேருக்கு மேற்பட்ட இராணுவத்தினர் மண்சரிவில் பாதிக்கப்பட்ட களுபகனவத்த, புலத்கொகுபிட்டிய ஆகிய பிரதேசங்களிலும் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை பூராகவும் நிவாரண மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடும் வகையில் 31 குழுக்களை நிறுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன் 633 பொதுமக்களின் உயிர்களை காப்பற்றியதுடன் மன உளைச்சளுக்கு உள்ளான 188 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், மாம்புர மற்றும் வாரியப்பொல ஆகிய பிரதேசங்களில் வெள்ளத்தினால் மூழ்கடித்து இரண்டு இறந்த உடலங்களும் கடற்படையினரால் மீடகப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, தப்ப்பொவ மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களில் வௌ்ளத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்த 8 பேரை இலங்கை விமானப்படையின் எம்.ஐ.17 வகை ஹெலிகொப்டர் நேற்று முந்தினம் (17) மீட்டுள்ளது. அத்துடன் வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இலங்கை விமானப்படை கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

By

Related Post