Breaking
Mon. Dec 23rd, 2024
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இவ்வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
பங்களாதேஷ்க்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அவர், அவ் விஜயத்தினை முடித்துக் கொண்டு இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.   இலங்கைக்கான இவரது விஜயத்தின் போது இவர் பல அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

இவருடன் தெற்காசிய நாடுகளுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் மன் பிரீட் சிங் ஆனந்தும் வருகை தரவுள்ளார்.  பங்களாதேஷுக்கான இவரது விஜயத்தில், பங்களாதேஷ் அரசுக்கான அமெரிக்காவின் ஆதரவு, வன்முறைக்கு எதிரான போராட்டங்கள் குறித்து கலந்துரையாடவுள்ள இவர் இலங்கைக்கான விஜயத்தின் போது இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு, ஜனநாயகம், நல்லாட்சி என்பவை தொடர்பிலேயே இவர் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post