Breaking
Tue. Mar 18th, 2025

மூன்று தசாப்த கால இடைவெளியின் பின்னர் இலங்கை நாடாளுமன்றிற்கு கணவனும் மனைவியும் செல்லும் முதல் சந்தர்ப்பம் இன்று பதிவாகியிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட தயா கமகே மற்றும் தேசியப் பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்ட அனோமா கமகே ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

வர்த்தகரான தயா கமகே, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தயா கமகே இதற்கு முன்னதாக கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக கடமையாற்றி வந்தார்.

அனோமா கமகே கடந்த நாடாளுமன்றில் உறுப்பினராக கடமையாற்றியதுடன் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதி விவசாய அமைச்சராகவும் கடமையாற்றினார்.

இறுதியாக 35 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டி ஹாரிஸ்பத்துவ மற்றும் குண்டசாலை ஆகிய தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட திரு. ஆர்.பீ. விஜயசிறி மற்றும் திருமதி எல்.எம். விஜயசிறி ஆகியோர் நாடாளுமன்றிற்கு தெரிவாகியிருந்தனர்.

Related Post