Breaking
Mon. Dec 23rd, 2024

இந்தியா மற்றும் இலங்கை நீதிபதிகளுக்கிடையிலான அனுபவங்களை பரிமாற்றும் நிகழ்வொன்று, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மத்திய இந்தியாவிலுள்ள போபால் நகரில் நடைபெறவுள்ளது.

சர்வதேச உறவுகளை வலுப்படுத்தும் முகமாக, தேசிய நீதித்துறை அகடமியால் இந்த அனுபவங்களைப் பரிமாற்றும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐந்து நாள் பயிற்சி நிகழ்வாக இது முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இந்த வருடத்தில் முன்னெடுக்கப்படுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடுகளில் இதுவே முதலாவது நிகழ்ச்சியாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் பிரதம நீதியரசரும் குறித்த அகடமியின் அங்கத்தரவருமான நீதிபதி டி.எஸ்.தாக்கூரின் வழிகாட்டலின் கீழ் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியானது, வழக்குகளை விசாரணை செய்யும் முறைமை, குற்றச்செயல்கள், சட்டங்கள் மற்றும் மரணதண்டனைகளின் பயன்கள் போன்றவை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

இதேபோன்று, பங்களாதேஷ், பூட்டான், மியன்மார் மற்றும் நேபால் போன்ற நாடுகளிலுள்ள நீதிபதிகளுக்கும் நடைபெறவுள்ளது. இதற்காக, இலங்கையிலிருந்ந்து 7 பேர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்தப் பயிற்சிக்கு சமுகமளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

By

Related Post