Breaking
Mon. Dec 23rd, 2024
நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 39 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் இரண்டு பிக்குமார் மற்றும் மாணவியரும் உள்ளடங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்ட மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கடுமையான காயங்களுக்குட்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு வெறும் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் இன்று கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

எனினும் இச்சம்பவத்தின் போது சாதாரண காயங்களுக்குள்ளான ஆறு பொலிசார் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சகல வசதிகளுடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.

By

Related Post