Breaking
Sun. Dec 22nd, 2024

இலங்கை ஜனாதிபதிகள் சட்டத்திற்கு மேல் உள்ளவர்களாக கருதி இதுவரை செயற்பட்ட யுகத்தை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆயத்தமாகியுள்ளார்.

அதற்கமைய அவர் சாதாரண குடிமகனாக நீதிமன்றில் ஆஜராகுவதற்கு ஆயத்தமாகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் போது, அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸஸ அத்தநாயக்க மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களை ஊடகங்களின் முன் சமர்ப்பித்து, மக்களை பிழையாக நடத்தியிருந்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் திஸ்ஸவுக்கு எதிராக நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கின் சாட்சியாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் ஆஜராகவுள்ளார்.

அதற்கமைய சாட்சியாளரான ஜனாதிபதியிடம் குறுக்கு கேள்விகள் கேட்பதற்கு இரண்டு தரப்பு வழக்கறிஞர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. போலி சாட்சி வழங்கினால் தண்டனை அனுபவிப்பதற்கும், பொதுவான சாட்சியாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முகம் கொடுக்கவுள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் பிரதமர் இந்த வழக்கின் சாட்சியாளராக நீதிமன்றில் ஆஜராகுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

ஜனவரி மாதம் எட்டாம் திகதி மக்களினால் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் முடிவாக 19வது திருத்த சட்டத்திற்கமைய இவ்வாறான மாற்றங்கள் நிகழ்வதை மக்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

By

Related Post