Breaking
Mon. Dec 23rd, 2024

அஸ்ரப் ஏ சமத்

சம்மாந்துறை சென்றல் கேம்; பகுதிக்கு ஒரு (குவாசி) காதீ நீதிமன்றம், வடபுல இடம்பெயர்ந்த வார்க்காளர்களை பதிவதற்கு சட்ட சீர்திருத்தம் கொண்டுவருவது பற்றி நீதிஅமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

நாவிதன் வெளி மத்தியமுகாம் சம்மாந்துறை தொகுதியில் அமைந்திருந்தாலும் சம்மாந்துறையிலிருந்து சுமார். 15 கி.மீ தூரத்தில் இருக்கின்றது. இம் மக்களுக்குத் தேவையான காதி நீதிமன்றம் இல்லாமை நீண்டகால குறைபாடாகவே இருந்து வந்தது.

குடும்ப பிணக்குகள் தொடர்பான விடயங்களுக்கு சம்மாந்துறையில் உள்ள காதியார் நீதிமன்றத்திற்கு இம் மக்கள் செல்ல வேண்;டியிருப்பதால் பலத்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக சம்மாந்துறைக்கு மத்திய முகாமுக்கும் இடையில் இலகுவான போக்குவரத்திண்மையினால் இம்மக்களின் கஸ்டங்களை மேலும் மோசமாக்கி வருகின்றது.

கடந்த காலங்களில் இம்மக்களின் வாக்குகளைப் பெற்ற பிரதிநிதிகள் இது தொடர்பாக எதுவித கவனம் செலுத்தாது மிகவும் துரதிஸ்டவசமாகும். குறிப்பாக நிதியமைச்சர் பதவி கடந்த 4 வருடங்களுக்கு மேலாக ;இம்மக்களின் வாக்குகளைப் பெற்றுவந்த கட்சித் தலைமைத்துவத்திடமே இம்முக்கிய தேவை தொடர்பாக எதுவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இந் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அமைச்சர் றிசாத் பதியுத்தீன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் ஆகியோர் நிதியமைச்சர் விஜயதாச ராஸபக்சவைச் சந்தித்து இந்தக் காதி நீதிமன்றத்தை அமைக்க முன்வைத்தபோது அவர் அதனைக் ஏற்றுக்கொண்டார். விரைவில் உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

அதே நேரம் இக் கூட்டத்தின்போது வட புல இடம்பெயர்ந்த வாக்களார்கள் வாக்காளர் இடாப்பில் தங்களது பெயரை மீண்டும் பதிவதற்காக ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வருவதாகவும் இங்கு ஆராயப்பட்டது,

Related Post