Breaking
Mon. Dec 23rd, 2024
தனது தந்தையான பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் படுகொலை விவகார வழக்கில் நீதி கிடைக்கும். இப்போது எமது அரசாங்கமே ஆட்சியில் உள்ளது. அதனால், நீதி கிடைப்பது நிச்சம் என்று மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர கூறினார்.

பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர உட்பட நால்வரின் படுகொலை குறித்த வழக்கு விசாரணைக்காக மன்றில் ஆஜராகியிருந்த ஹிருணிகா பிரேமசந்திர, வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘ஜனாதிபதி வழங்கினால், கொலன்னாவை தொகுதியின் அமைப்பாளர் பதவியை பொறுப்பேற்பேன்’ என்றார்.

Related Post