அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் வித்தியாசமான ஓவியக் கண்காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. வரையப்பட்ட ஓவியங்கள் நீருக்கடியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நீருக்கடியில் இடம்பெற்ற இந்த ஓவியக் கண்காட்சியை பார்வையிடுவதற்கு பெருமளவிலான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.
கடலுக்கடியில் அமையப் பெற்றுள்ள பாறைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் காண்போரை கவரும் வகையில் அமையப் பெற்றிருந்தன. சுழியோடிகள் ஓவியங்களை கைகளில் சுமந்தவாறு ஓவியக் கண்காட்சியில் ஈடுபட்டுள்ளமை இங்கு காட்சிப்படுத்தப்பட்டது.
சிலிக்கனால் சூழப்பட்ட வெளிப்புறங்களை கொண்டு அமைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டதாக நியூஸ் பியுரோவை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. அட்லாண்டிக் கடற்பரப்பில் நீர் மேற்பரப்பிலிருந்து 90 அடி ஆழத்தில் இந்த ஓவியக்கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.