நீர்கொழும்பு வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 3 கட்டிடங்களில் அதிக வெப்பம் நிலவுவதால் அங்கு நோயாளிகள் சிகிச்சைப் பெற முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உருக்கு அல்லது இரும்பிலான பொருட்களைக் கொண்டு குறித்த கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையே இதற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அதிக வெப்பம் காரணமாக குறித்த கட்டிடத்தினுள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பெருந்தொகையான மருந்து வகைகளும் அழிவடைந்துள்ளதாக வைத்தியசாலையின் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மக்களின் மில்லியன் கணக்கான பணத்தினைக் கொண்டு அவசரஅவசரமாக நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டடிமானது நோயாளர்களை தங்க வைப்பதற்கு உகந்த ஒன்றல்ல என்றும், இந்த வெப்பத்தின் தாக்கம் நேற்று இரவு கடுமையாக இருந்ததாகவும் வைத்தியர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சிகிச்சைக்காக தங்கியிருக்கும் நோயாளிகள்,வைத்தியர்கள்,தாதிகள் உள்ளிட்டவர்கள் இதனால் பெரும் அவதி படுவதாகவும்,இந்த வெப்பத்தினால் நோயாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய மேலதிக சிகிச்சைகளிலும் பாதிப்பு ஏற்படலாம் என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.