ஏறாவூர் அபூ பயாஸ்
ஏறாவூர்: ஏறாவூர் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட ஐயங்கேனி தமிழ் பிரிவில் இன்று மாலை திருமால் பவித்திரன் என்ற பதினெட்டு மாத ஆண் குழந்தை இதனது வீட்டு குளியலறையில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் ரக வாளியினுள் தலை கீழாக விழுந்து மூச்சுத்திணறி மரணமாகிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
குளியலறையில் உடுப்புகள் கழுவிக்கொண்டிருந்த இக்குழந்தையின் தாயாரான பிரியா என்பவர் தனது ஒரு மாத பெண் குழந்தைக்கு தாய்ப்பால கொடுப்பதற்காக எழுந்து சென்றபின்னர் இதாயை தேடி குளியலறைக்கு சென்ற பதினெட்டு மாத ஆண் குழந்தையே இப்பரிதாப மரணத்தை தழுவியுள்ளது.
இவரது சகோதரியின் ஐந்து வயது மகனான சிறுவன்தான் இக் குழந்தை தலை கீழாக நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து கிடப்பதைக் கண்டு தாயிடம் கூறியுள்ளார்.
அதன் பிறகு ஓடிச்சென்று குழந்தையை தூக்கியபோது உணர்வற்று கிடந்ததால், ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு அவசரமாக எடுத்துச் சென்றபோதும் குழந்தை மரணித்துவிட்டதாக வைத்தியர் தெரிவித்துள்ளார். தற்போது குழந்தையின் பிரேதம் ஏறாவூர் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.