Breaking
Mon. Nov 18th, 2024

-அமைச்சின் ஊடகப்பிரிவு

நுகர்வோர் அதிகார சபையின் விசாரணை அதிகாரிகள் 137 வர்த்தக நிலையங்களை நேற்று (20)  சுற்றிவளைத்த போது, அரிசியை அதிக விலையில் விற்ற 52 வியாபாரிகள் சிக்கிக் கொண்டனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் 13 வர்த்தகர்களும், கண்டியில் 12 வர்த்தகர்களு, குருநாகலில் 10 வர்த்தகளும், அநுராதபுரம் 8 வர்த்தகர்கள், வவுனியா 7 வர்த்தகர்கள், பொலநறுவை மற்றும் கேகாலையில் 6 வர்த்தகர்களும் இந்த சுற்றிவளைப்பின் போது அகப்பட்டுக் கொண்டனர். நுகர்வோர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்குக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையிலும் சில வியாபார நிலையங்கள் குறிப்பாக முற்றுகையிடப்பட்டதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை னுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணை அதிகாரிகள் தமது நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உத்தரவிட்டுள்ளார்.

சனி, ஞாயிறு போயா தினங்களிலும் விடுமுறைகள் என்று பாராது கடமையில் ஈடுபட்டு பாவனையாளர்களின் நன்மை கருதி செயற்படுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் வர்த்தகர்கள் உள்நாட்டு அரிசி அல்லது இறக்குமதி அரிசியை வகைப்படுத்தி விலைப்பட்டியலை காட்சிக்கு வைக்குமாறு அமைச்சர் வேண்டியுள்ளார். மோசடியில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

By

Related Post