Breaking
Mon. Dec 23rd, 2024
நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் திருத்தப்பணிகள் இன்று  மாலையுடன் நிறைவடையும் என்று இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. கடந்த 25ஆம் திகதி தொடக்கம் முழுமையாக இயக்கம் செயலிழந்த நுரைச்சோலை அனல் மின்னிலையத்தின் பணிகள் நாட்டின் மின்தேவைக்கு பாரிய தாக்கம் செலுத்தியது.
தலைநகர் மற்றும் அதனை அண்மித்த பல பாகங்களில் மின்சாரம் இடைநிறுத்தப்பட்டதுடன் மின்சாரத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. கடந்த வௌ்ளிக்கிழமை திருத்தப்பணிகள் ஆரம்பித்தன என்றும் இன்றுடன் நிறைவடையும் என்றும் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தகு அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட தெரிவித்தார்.

By

Related Post