Breaking
Mon. Mar 17th, 2025
Nuwara eliya

வசந்த காலத்தையொட்டி நுவரெலியா நகரில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, விசேட போக்குவரத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சுவரொட்டியில், அவசர நேரங்களில் நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியையும், பொலிஸாரையும் 052-2222226, 052-2222223, 052-2222444, 052-2222225, 072-6534317 ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வசந்தகால நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள்

தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பற்ற பிரதேசங்களில் நடமாடுவதையோ அல்லது பெண்களை, சிறுவர்களை தனித்து விடுவதையோ தவிர்க்குமாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த வசந்த காலத்தையொட்டி எதிர்வரும் 18ஆம் திகதி காலை 10 மணிமுதல் “சினிசிட்டா” விளையாட்டரங்கில் பொலிஸாரின் விசேட நிகழ்ச்சியும் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post