Breaking
Mon. Dec 23rd, 2024

இலங்கையில் உள்ள நூடில்ஸ் உணவில் கலவையொன்று சேர்க்கப்பட்டுள்ளது தொடர்பில் வெளியான செய்தியனையடுத்து இத தொடர்பில் உரிய பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்தியாவில் மெகீ நுாடில்ஸ் தடை செய்யப்பட்டுள்ளதாகவும்,அதனை இலங்கைக்குள் கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் தாம் சுங்க பணிப்பாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் கூறினார்.

நிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவிக்கையில் –
இந்தியாவில் மெகி நுடில்ஸ் பாவைணை தடை செய்யப்பட்டுள்ளதால்,இலங்கைக்கு அவை இற்ககுமதி செய்வதும் தடை செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
 பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ள நுடில்ஸ் வகையின் அறிக்கை இரு வாரங்களுக்குள் கிடைத்ததும் இது தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் இதன் போது கூறினார்.
அதே வேளை சதொச நிறுவனம் கடந்த ஆட்சியின் போது பெரும் நஷ்டத்துக்குள் உள்ளாகியுள்ளதால்,அதனை மீண்டும் புத்துயிர் அளிக்க தெவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்,ஜூலை மாதம் 7 ஆம் திகதி புதிய வடிவில் மக்களுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
தற்போது 305 லக் சதொச விற்பனை நிலையங்கள் இருப்பதாகவும்,இவ்வருட முடிவுக்குள் மேலும் 50 புதிய விற்பனை நிலையங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.அதே வேளை கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட 80 சதொச நிலையங்களுக்கான கணணி மயப்படுத்தலுக்கென 600 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும்,இருந்த போதும் தற்போது ஒட்டுமொத்த 305 நிலையங்களுக்குமான கணணி மயப்டுத்தலுக்கு 300 மில்லியன் ரூபாய்களே தேவைப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் மேலதிக செலவுகளால் நிறுவனம் பல வகையான இழப்புக்களை சந்திக்க நேரிட்டுள்ளதாகவும் கூறினார்.

Related Post