Breaking
Mon. Dec 23rd, 2024

நூலகத்தில் இருந்து எடுக்கும் புத்தகங்களை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றும் செயல்கள் எல்லா நாடுகளிலும் வழக்கம் போல் இருக்கிறது.

அமெரிக்காவில் இப்படி ஏமாற்றும் நபர்களுக்கு ஜெயில் தண்டனை கொடுக்கும் சட்டத்தை கொண்டுவந்துள்ளனர். அங்குள்ள அலபாமா நகரில் உள்ள நூலகத்தில் ஏரளமான புத்தகங்கள் திரும்பி வரவில்லை.

சுமார் ரூ.1½ கோடி மதிப்புள்ள புத்தகங்கள் இப்படி திரும்பி வராமல் உள்ளது. எனவே புத்தகங்களை திருப்பி தராதவர்களுக்கு கடும் தண்டனை வழங்க அந்த நகர நிர்வாகம் முடிவு செய்தது.

அமெரிக்காவை பொறுத்தவரை நாடு முழுவதும் பொது சட்டம் இருந்தாலும், ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒவ்வொரு விதமான சட்டம் மற்றும் ஒவ்வொரு நகருக்கும் தனித்தனி சட்டம் என அங்கு உண்டு.

அதன்படி அலபாமா நகரில் நூலக புத்தகத்தை திருப்பி தராதவர்களுக்கு தண்டனை வழங்க புதிய அவசர சட்டத்தை உருவாக்கி உள்ளனர். அதன்படி, புத்தகத்தை திருப்பி தராதவர்களுக்கு முதல்கட்டமாக ரூ.6 ஆயிரம் அபராதம் வழங்கப்படும். மேலும் அவர்கள் குற்றத்தை பொறுத்து அவர்களுக்கு ஒரு மாதம் ஜெயில் தண்டனை வழங்கப்படும். இந்த சட்டம் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக நூலக இயக்குனர் பால் லாரிட்டா கூறும்போது, நூலகத்தில் இருந்து புத்தகத்தை திருப்பி தராதவர்கள் நூலக புத்தகத்தை மட்டும் திருடவில்லை. அவர்கள் மக்களின் வரிப்பணத்தை திருடுகிறார்கள். எனவே தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறினார்.

By

Related Post