Breaking
Tue. Jan 7th, 2025
1980,1981,1982 ஆம் ஆண்டுகளில் தனியார் துறையினால் பெற்றுக் கொள்ளப்பட்ட நெசவு கைத்தொழில் துறையில் பணியாற்ற முடியாமல் வேலையிழந்தவர்களுக்கு நஷடயீட்டை பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

1960-70 ஆம் ஆண்டு காலப்பகுதி இத்துறையின் மிகவும்

முக்கியத்துமிக்கதாகும்.அதன் ஆட்சிக்கு வந்த அரசு மேற்கொண்ட நடை முறையினால் இத்துறையானது பின்னடைவை சந்திக்க நேரிட்டது.
அதனால் அத்துறையில் பணியாற்றிய ஊழியர்கள் பெரும் சிரமங்களை எதிர் கொள்ள வேண்டியேற்பட்டது.அன்றைய அரசு தமது கட்டுப்பாட்டில் இருந்த இத்திணைக்களத்தினை தனியார் துறைக்கு வழங்கியதால்,10 வருடங்களுக்கு மேலாக  பணியாற்றி ஊழியர்கள் ஓய்வூதியத்துக்குள் உள்வாங்கப்பட்டதுடன்,ஏனைய ஊழியர்கள் தொழிலை இழக்க நேரிட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பிறகு மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்திற்கமைய அமைச்சர் றிசாத் பதியுதீன் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கமைய பணியிழந்தவர்களுக்கு நஷ்டயீடு வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டது.
இந்த வகையில் மொத்தம் 3605 பேருக்கும்,அதில் மரணமான 196 பேரின் குடும்பத்திற்கும் இந்த நஷ்டயீட்டு தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இரு கட்டமாக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதுடன்,முதற் கட்ட கொடுப்பனவு மார்ச் மாதம் 13 ஆம் திகதிக்கு முன்னா் வழங்கப்பட்டுவிடும் என்றும் கை்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
தெரிவு செய்யப்பட்ட 100 பேருக்கு வைபவரீதியாக இந்த கொடுப்பனவுகள் அமைச்சின்  கேட்போர் கூடத்தில் வைத்து அமைச்சர்களான அதாவுட செனவிரத்ன,வாசுதேவ நாணயக்கார,அமைச்சர் றிசாத் பதியுதீன்,அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தன ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.

Related Post