சாலையில் ஒரு பூனை விபத்தில் அடிப்பட்டு விடுகிறது. உடனே அந்த பூனையை சக பூனை ஒன்று ஓரமாக கொண்டு சென்று அந்த பூனைக்கு உயிர் கொடுக்க எவ்வளவோ முயற்சி செய்கிறது, பின்னர் அந்த பூனை இறந்து விட்டதை உறுதி செய்து கொண்ட பின் காவல்காத்து இருக்கிறது….
சாலைகளில் மனிதர்கள் விபத்தில் பாதிக்கப்பட்டால் அங்கே உதவி செய்ய சென்றால் தம்முடைய அலுவல் பாதிக்கப்படும் என்று ஈவு இரக்கம் இல்லாமல் இருக்கும் மனிதர்களுக்கு இப்படம் சமர்ப்பணம்.
மேலும், சில இடங்களில் சாலை விபத்து நடைப்பெற்றால் அவர்களுக்கு உதவி செய்யமால் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் நபர் இடம் இருந்து செல்போன் நகை பணம் பறித்து ஓடும் ஆறு அறிவு உள்ள மனிதனை விட இந்த பூனை மேலானது.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக விரைந்து முதலுதவி செய்யும் ஈரநெஞ்சம் கொண்ட மக்களும் இவ்வுலகில் வாழத்தான் செய்கிறார்கள், அவர்களுக்கு இப்படம் உந்து சக்தியாகவும் அமையும்…