ஊவா மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் ஹரினுக்கும், மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்காவுக்கும் இடையில் பிரிக்கவே முடியாத இறுக்கமான நட்பு நிலவுகின்றது.
இந்நிலையில் ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது ஹிருணிக்காவும் பதுளை சென்றிருந்தார். அரசாங்கத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த அவர், ஹரினின் பரம எதிரியான தயாசிறி ஜயசேகரவுடன் ஒன்றாக சுற்றித்திரிந்தார்.
இதன் காரணமாக ஹரின்-ஹிருணிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த நாட்களில் ஹிருணிக்காவும் கனத்த மௌனத்துடன் அமைதியாக இருந்தார்.
இதற்கிடையே ஹிருணிக்காவின் பிறந்தநாள் கடந்த சில நாட்களுக்கு முன் வந்துள்ளது. அதன் போது பழைய பகை மறந்து ஹரினும் தொலைபேசி வழியே ஹிருணிக்காவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஹரினின் தொலைபேசி அழைப்பு வந்த மகிழ்ச்சியில் காருக்குள் துள்ளிக் குதித்த ஹிருணிக்கா, உட்கார்ந்த நிலையிலேயே நடனமாடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தனது தந்தையின் பாரம்பரிய கட்சியான சுதந்திரக் கட்சியை விட்டு விலகி, ஹரினுக்காக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவும் ஹிருணிக்கா தயாராகி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (K)