Breaking
Wed. Nov 20th, 2024

தரம் பரீட்சிக்கப்பட்டு 109,000 மெ.தொ. தருவிப்பு நாட்டின் நிலவிய மோச மான காலநிலை காரணமாக நெல் உற்பத்தியில் ஏற்பட்ட தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டே அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. தருவிக்கப்பட்ட அரிசி யாவும் உரிய அனுமதியைப் பெற்றே, நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டதாக வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சிறிய மற்றும் நடுத்தர அரிசியாலை உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரே ரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:

109.000மெற்றிக்தொன் அரசியை வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு இறக்குமதிசெய்யத் தீர்மானித்தது. இதில் 68.000மெற்றிக்தொன் நாடு அரிசி, 25ஆயிரம் மெற்றிக்தொன் சம்பா அரிசி மற்றும் 14ஆயிரம் மெற்றிக்தொன் வெள்ளை அரிசி உள்ளடங்கியிருந்தன. 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் வரையான காலப் பகுதியில் கூட்டுறவு மொத்த நிறுவனங்களால் இந்த இறக்குமதிகள் மேற்கொள்ளப்பட்டன.

வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்துக்கு அமைய சதோச நிறுவனத்தின் ஊடாக இந்த இறக்குமதிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில், நாட்டில் நிலவிய மோசமான காலைநிலை காரணமாக நெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்திருப்பதால், அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்யும் நோக்கில் தேவையானளவு அரிசியை இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய 300.000 மெற்றிக்தொன் அரசியை அரசாங்கமும், 200,000 மெற்றிக்தொன் அரிசியை தனியார் துறையின் ஊடாகவும் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது.

Related Post