நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணம் குறித்த மர்மங்களை வெளியிடலாமா என்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு புதிய அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மர்மங்களை வெளியிட வேண்டும் என்று நேதாஜியின் குடும்பத்தாரும் ஆர்வலர்களும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இருப்பினும் பிரதமர் அலுவலகம் வெளி நாடுகளுடனான உறவு பாதிக்கப்படக் கூடும் என்று மறுத்து வந்தது. இந்நிலையில் ஜெர்மனில் நேதாஜியின் கொள்ளுப் பேரன் சூரியக் குமார் போஸ், பிரதமரை சந்தித்து நேதாஜியின் இறப்பில் இருக்கும் மர்மத்தை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகத் தெரிய வருகிறது.
இதையடுத்து நேதாஜி குறித்த 40 ஆயிரம் பக்கங்கள் கொண்ட 90 கோப்புக்களை ஆய்வு செய்து நேதாஜி மரணம் குறித்த மர்மங்களை வெளியிடலாமா என்று ஆய்வு செய்ய மத்திய அரசு அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்துள்ளது.வெளியுறவுத் ,துறை அதிகாரிகள், உள்துறை அமைச்சக அதிகாரிகள், இந்திய உளவுப்படை ரா அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் என்று அமைக்கப்பட்ட இந்த அதிகாரிகள் குழு, இன்று தமது முதல் ஆலோசனைக் கூட்டத்தைத் துவக்கி உள்ளது.