Breaking
Fri. Dec 27th, 2024

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சூர்யா பஹடுர் தப்பா தனது 87 ஆவது வயதில் நேற்று (15) காலமானார். இவர் நேபாளத்தின் அரசியல் வாழ்வில் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேல் இருந்தவராவார். அத்துடன் பிரதமர் பதவியில் சுமார் 05 முறைகள் பதவி வகித்துள்ளார்.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த  மார்ச் 29 ஆம் திகதி இந்தியாவின் ஜேகார்ன் மாநிலத்திலுள்ள மெடன்ரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் அந்த வைத்தியசாலையிலேயே நேற்று (15) இவர் உயிரிழந்துள்ளார்.

ஆயினும் உயிரிழந்த சரியான நேரம் தகுந்த காரணம் ஆகியன இன்னும் வௌியிடப்படவில்லை ஆயினும் கூடிய விரையில் வௌியிடப்படுமென வைத்தியசாலையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

1950 ஆம் ஆண்டில் அரசியல் வாழ்வினுள் உள் நுழைந்த இவர், 1958 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்டு ஆலோசனை கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1959 ஆம் ஆண்டு அப்பர் ஹவுஸில் உயர் பதவியில் நியமிக்கப்பட்டார்.  1966 ஆம் ஆண்டு நேபாள நாட்டின் திருத்தப்பட்ட யாப்பு சீர்திருத்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட அரசியல் சாசனத்தில் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து 1963-1964, 1965–1969, 1979–1983, 1997–1998 மற்றும் 2003-2004 என மொத்தமாக 05  முறைகள் பிரதமராக பதவி வகித்த தப்பா நேற்று (15) தனது 87 ஆவது வயதில் காலமானார்.

1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி நேபாளத்தில் பிறந்த இவர் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி இந்தியா புதுடில்லி மருத்துவமனையில் உயிழிழந்தார். இவர் தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றுக்கு சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post