நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் அந்நாட்டில் மக்கள் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்தும் உண்ண உணவின்றியும் துன்பப்படுகின்றனர். இதன்படி நேபாள அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தொடர்பிலான பட்டியலொன்றை இலங்கை அரசாங்கத்திடம் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்களை சிவில் அமைப்புகளோ அல்லது தனி நபரோ வழங்க விரும்பினால் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்க முடியும். மேலும் இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெறவேண்டுமாயின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தை அணுகுமாறு பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதேவேளை உலர் உணவு, அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண சேவை அதிகாரிகள் குழு நேற்று காலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கத்மண்டு நகரை நோக்கி பயணித்ததாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நேபாள தேசத்தில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியினால் அந்நாட்டில் பல பகுதிகள் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. மேலும் அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளை இழந்துஇ உண்ண உணவின்றி கஷ்டப்பட்டு வருவதாக தெரியவருகிறது. எனவே இது குறித்து நேபாள அரசின் தேவையை கண்டறிவதற்காக விசேட விமானம் நேற்று முன் தினம் நேபாளத்தை நோக்கி புறப்பட்டது.
இதற்கமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்களை நேபாள அரசு பட்டியலிட்டுள்ளது. இது குறித்தான பட்டிய லின் அடிப்படையில் வீடுகளை இழந்தோர் தங்குமிட வசதிகளின்றி இருப்பதுடன்இ கூடாரம் அமைப்பதற்கு தேவையான உபகரணங்களும் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். மேலும் உறங்குவதற்கு தேவையான மெத்தைகள் மற்றும் போர்வைகளின்றி உறக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். அதேபோன்று குடிப்பதற்கு உகந்த வகையில் குடிநீர் வசதிகள் இன்மையால் பாதிக்கப்பட்டுள்ள னர்.
இந்நிலையில் அப்பட்டியலில் மெத்தைஇ போர்வைஇ குடிநீர்இ அத்தியாவசிய பொருட் கள் மற்றும் கூடாரம் அமைப்பதற்கு தேவையான பொருட்களே கோரப்பட்டுள்ளன. மேற்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்களை சிவில் அமைப்புகளோ அல்லது தனி நபரோ வழங்க விரும்பினால் மாவட்ட செயலாளரை அணுகமுடியும் அத்தோடு இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெறவேண்டுமாயின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தை அனுக முடியும்.
இதேவேளை உலர் உணவு, அத்தியாவ சிய பொருட்கள் அடங்கிய நிவாரண சேவை அதிகாரிகள் அடங்கிய குழு ஸ்ரீல ங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் நேற்று காலை 8.15 மணி க்கு கொழும்பு கட்டு நாயக்க விமான நிலையத்திலிருந்து காத்மண்டு நகரிற்கு பயணித்தது.