Breaking
Sat. Nov 23rd, 2024

இலங்கை இராணுவத்தினர், நேபாளத்துக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்வதற்கு சென்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எங்களுடைய இராணுவம், வேறு நாடொன்றுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்வதற்கு சென்றிருக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் சுட்டிக்காட்டினார். இதற்கு முன்னர் அமைதி காக்கும் படைக்கு, ஐ.நா.வின் ஊடாகவே எமது படையினர் இணைந்துகொள்ளப்பட்டனர். இராணுவத்தினரை வேறு நாடுகளுக்கு சேவைக்கு அனுப்பும் போது நாடாளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்துவது உலக சம்பிரதாயமாகும் என்றும் அவர், நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். இலங்கை படையினர், நிவாரண நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு பொறுப்பெடுத்த பகுதியில் வீதிகள் கீழிறங்கியிருப்பதாகவும், நிவாரணங்களுடன் மற்றுமொறு விமானம் புதன்கிழமை, காத்மண்டுவை நோக்கி செல்லும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். காத்மண்டுவில் சிக்கியிருக்கின்ற இலங்கை மாணவர்களை விமானத்தின் ஊடாக இலங்கைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதன்போது எழுந்த, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, நேபாளத்துக்கு நிவாரண நடவடிக்கைகளுக்காக இலங்கை படையினரை அனுப்புவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் எடுத்த தீர்மானத்தை வரவேற்பதாகவும் அதற்கு தங்களுடைய ஒத்துழைப்பை வழங்குவதாவும் அறிவித்தார்.

Related Post