நேபாளி காங்கிரஸ் கட்சி தலைவரும், நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் இன்று (9) காலமானார். அவருக்கு வயது 79.
சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் பனாரஸ் நகரில் பிறந்த கொய்ராலா, நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக அரசியலில் ஈடுபட்டு சுமார் 16 ஆண்டுகாலம் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருந்தார். விமான கடத்தல் தொடர்பாக இந்தியாவில் உள்ள சிறைகளில் 3 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த இவர், கடந்த 10-2-2014 அன்று நேபாள நாட்டின் பிரதமராக பதவி ஏற்றார்.
நேபாளத்தில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அரசியலமைப்பு சட்ட சீர்திருத்தத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படும் கொய்ராலா, நுரையீரல் சார்ந்த கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று நாடு திரும்பிய இவர், தலைநகர் காத்மாண்டுவின் புறநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலை 12.50 மணிக்கு காலமானார்.
நுரையீரல் அழற்சி நோயால் மரணம் அடைந்த சுஷீல் கொய்ராலாவின் உடல் காத்மாண்டு நகரில் உள்ள நேபாளி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.