நைஜீரியாவில் நேற்று (31) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முதற்தடவையாக எதிர்கட்சித் தலைவர் முகம்மட் புஹாரி சரித்திர புகழ் பெற்ற வெற்றியை ஈட்டியுள்ளார்.
72 வயதான முகம்மட் புஹாரி முன்னாள் போராளிக்குழு தலைவர் ஆவார்
அவர் சுமார் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார் என்று அங்கிருந்து வரும் உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்கு மோசடிகள் இடம்பெற்றபோதிலும் இவ்வெற்றி பாராட்டத்தக்கது என கருத்து தெரிவித்துள்ளனர் கண்காணிப்பாளர்கள். இவ்வெற்றியை பொதுமக்கள் மிக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் என பிபிஸி செய்தி வெளியிட்டுள்ளது.