சொத்துக் குவிப்பு வழக்கில் தண் டிக்கப்பட்டு, பெங்களூர் சிறையில் இருக்கும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளருமான ஜெயலலி தாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. நாடா ளுமன்ற உறுப்பினர்கள் இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நேற்று ‘மெளன உண்ணா விரத அறப்போராட்டம்’ நடத்தினர்.
இந்திய நாடாளுமன்ற வளா கத்திற்கு உள்ளே அமைந்துள்ள காந்தி சிலை முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், இந்திய நாடாளுமன் றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டார்கள்.
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இதுவரை தமிழ்நாட்டிற்குள் மட்டும் நடைபெற்று வரும் போராட்டங்களை நாடு முழுவதும் விரிவுப்படுத்த அ.தி. மு.கவினர் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று இந்தப் போராட்டம் புதுடில்லியில் ஆரம்பமா கியுள்ளது.
இந்தப் போராட்டத்திற்கான ஏற்பாட்டளர்களில் ஒருவரான அக்கட் சியின் மக்களவை உறுப்பினர் களின் தலைவர் வேணுகோபால் கூறும்போது, இது ஒரு அறப் போராட்டம் என்றும் அமைதியாக மட்டுமே தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.
அ.தி.மு.க. மாநிலங்களைவை உறுப்பினர்களின் தலைவர் நவநீதகிருஷ்ணன் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களில் ஒருவரான மக்களவையின் துணைசபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
முக்கிய அலுவல் காரணமாக அவர்கள் டில்லிக்கு வரமுடியாத சூழல் உருவாகியிருப்பதாகவும் அதனாலேயே அவர்கள் இதில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அக்கட்சியில் மொத்தமுள்ள 4% நாடாளுமன்ற உறுப்பினர்களில், 45 பேர் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களோடு முன்னாள் மக்களவை உறுப்பினர் முருகேசனும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
இவர்கள் அனைவரும் கோங்கள் எதுவும் எழுப்பாமல் அமைதியாக காந்தி சிலை முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்தினர். இவர்கள் தமது கைகளில் ‘நீதி வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய வாசக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.