Breaking
Sat. Jan 11th, 2025

பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு என்பவற்றில பங்களாதேஷம்; இலங்கையும் பிணைப்புகளை ஏற்படுத்தியுள்ளன எனினும், அவை முழுமையான ஆற்றல் வளத்தை பெறுவதற்கு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும.; எனது அமைச்சின் கீழ் உள்ள வர்த்தகத் திணைக்களம் ஏற்கனவே வர்த்தக உடன்படிக்கையின் ஆய்வு அறிக்கையினை பூர்த்தி செய்துள்ளது என்பதனை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பங்களாதேஷ்pன் வர்த்தக ரீதியான சாதகமான தலையீடுகள் இருதரப்பு முயற்சிகளினை பெரிதும்; அதிகரிக்கும். உண்மையில், இரு தரப்பினரது தனியார் துறையினர் வர்த்தகத்தினை வழிநடத்தும் ஒரு இயக்கியாக காணப்படுகின்றனர்.
நேற்று வியாழக்கிழமை (27) ஏற்றுமதி அபிவிருத்தி சபை வளாகத்தில் பங்களாதேஷ்; வர்த்தக பிரதிநிதிகளுக்கு அளிக்கப்பட்ட விசேட அழைப்பு வைபவத்தின் போதே கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.

இவ்வைபவத்தில் பங்களாதேஷ் வர்த்தக பிரதிநிதிகள்இ அமைச்சின் உயர் அதிகாரிகள் இ ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் வர்த்தக திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அமைச்சர் ரிஷாட் அங்கு தொடர்ந்து பேசுகையில் தெரிவித்ததாவது:

பங்களாதேஷ்க்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவில் அமுலுக்கு வரவுள்ளது. வர்த்தக ரீதியான பங்களாதேஷ்pன் தலையீடுகளினை நாம் வரவேற்கிறோம.; இந்த தலையீடுகள் இருதரப்பு முயற்சிகளினை பெரிதும்; அதிகரிக்கும். உண்மையில், இரு தரப்பினரதும் தனியார் துறையினர் வர்த்தகத்தினை வழிநடத்தும் ஒரு இயக்கியாக காணப்படுகின்றனர் என்பதை நாமும் ஒத்;துக்கொள்கிறோம். எனது அமைச்சின் கீழ் உள்ள வர்த்தகத் திணைக்களம் ஏற்கனவே எங்களது வர்த்தக உடன்படிக்கையின் ஆய்வு அறிக்கையினை பூர்த்தி செய்துள்ளது என்பதனை தெரிவிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.அத்துடன் இரு தரப்பினரும் முறையே அந்தந்த அறிக்கைகளினை இப்போது பரிமாறிக்கொள்ளலாம். விருப்பு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையா அல்லது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையா என்று நீங்கள் எதிர்பார்க்கின்ற உடன்படிக்கையின் இயல்பு தன்மையும் தற்போது தயாராக உள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எங்கள் அரசாங்கத்தின்; இந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்hன செயல்முறை எந்ந அடிப்படையில் அல்லது வடிவத்தில் உள்ளதோ, உங்களின் தேவைபாடுகளின் படி அது சாதகமாக அமையக்கூடும். உண்மையில் இருதரப்பு வர்த்தக அதிகரிப்பு இருந்த போதிலும், இன்னும் பெரியளவிலான வர்த்தக சாத்தியங்களை இல்லை.எனினும் ஒப்பந்தமே பெரியளவில் இருதரப்பு வர்த்தக தொகுதிகளை முன்னோக்கி செல்ல வழிவகுக்கும்.
இந்த புதிய ஆரம்பம் இரு நாடுகளுக்குமிடையே பல புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன் இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை அதிகரிக்க ஒரு உறுதியான அடித்தளமாகவும் அமையும.;
2013 ஆம் ஆண்டில்; பங்களாதேஷக்கான, இலங்கையின் முன்னணி ஏற்றுமதி ஆடையும் (பருத்தி, துணிகள், சுருக்கு நெய்த துணிகள் மற்றும் ஆடைமூலமான ஏனைய பொருட்கள்); நொதியும் இருந்தன. அதே ஆண்டில் பங்களாதேஷம்; இருந்து முன்னணி இறக்குமதியாக மருந்து பொருட்கள் , ஆடை, மின்சார திரட்டி, மற்றும் உருளைக்கிழங்கு ஆகியன காணப்பட்டன. பங்களாதேஷற்கான இலங்கையின் ஏற்றுமதியில் பெரும்பாலானவை ஆடைத் துறை உற்பத்தியை சார்ந்தாகவே இருந்தன என்றார் அமைச்சர்.

பங்களாதேஷ் சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஏ.ரகுமான் இங்கு கருத்து தெரிவிக்கையில்:
எங்களது வர்த்தக அமைச்சர் தொஃபைல் அகமதினை தனிப்பட்ட முறையில் சந்திகவுள்ளேன். அவர் எதையும் முடிவு செய்வதில் தீவிரமானவரும் வலிமையானவருமாவர். எது சரியோ அதனை உடனடியாக நகர்த்துவார். அவரை சந்திக்கும் போது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் செயல்முறையினை விரைவுபடுத்த வேண்டும்; என வலியுறுத்துவேன்.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் உங்கள் பக்கத்தில் இருந்து என்ன படிமுறை முயற்சிகளினை எடுக்கின்றீகளோ அவரும் சரியான நேரத்தில் உடனடியாக தனது பக்கத்தில் இருந்து கைம்மாறு செய்வார். நமது பொருளாதாரத்தின் இயக்கியாக இருந்து வரும் தனியார் துறைக்கு அவர் மிகவும் ஆதரவாகவுள்ளார். டாக்காவில் இலங்கையயினுடைய பல முதலீடுகள் மிகவும் வெற்றிகரமாக நன்றாகவே செயற்பட்டு வருகின்றன என்பதனை தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். உதாரணமாக, இலங்கை கொமர்ஷல் வங்கி அங்கு நேர்த்தியாக தனது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. நம் வணிகங்களும் எப்போதும் அதன் உதவியை நாடி வருகின்றது எனவும் ரகுமான் தெரிவித்தார்.
இலங்கை வர்த்தக திணைக்களத்தின் படி, இரு நாடுகளுக்கும் இடையே 25 ஆவது ஏற்றுமதி இலக்கின் இருதரப்பு வர்த்தகம் 2012 ஆம் ஆண்டுடன் (83.19 மில்லியன் அமெரிக்க டொலர்)ஒப்பிடுகையில் 2013 ஆம் ஆண்டு 67 சத வீத அதிகரிப்புடன் 139.23 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ்க்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளினை விரைவில் நடைமுறைப்படுத்த பங்களாதேஷ் பிரதம மந்திரி திருமதி. ஷேக் ஹசினா தனது ஆர்வத்தினை அண்மையில் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related Post