இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பல உலக நாடுகள் உதவி வரும் நிலையில் பங்களாதேசும் இன்று நிவாரணங்களை விமானம் மூலம் அனுப்பியுள்ளது.
குறித்த நிவாரணப் பொருட்களானது பங்களாதேசின் விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேசின் பிரதமரான சேக் ஹசினாவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக அனுப்பப்படுவதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் குறித்த நிவாரணப் பொருட்களில் 100 மில்லியன் பெறுமதியான மருந்துப் பொருட்கள் ,நீரை சுத்தப்படுத்தும் மருந்து உள்ளிட்டவை அடங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பாகிஸ்தான் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் நேற்றைய தினம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கைக்கான பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் செயிட் சகில் ஹுசைனால் குறித்த நிவாரணப் பொருட்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.