பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமானப்படைக்குச் சொந்தமான விமானங்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளக விமானப் பயணங்களுக்காக விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களை சில் ராஜபக்ச பயன்படுத்தியதாகவும், இதற்காக பல கோடி ரூபா கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பசில் ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரிடம் நேற்று (8) ஜனாதிபதி ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்து கொண்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இன்று கடற்படை சிப்பாய் ஒருவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
2010ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்காக நியமிக்கப்பட்ட இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், பசில் ராஜபக்சவிடம் கடமையாற்றியிருந்தார்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் உள்ளக விமானப் போக்குவரத்திற்காக விமானப்படையின் ஹெலிகொப்டர்களை பயன்படுத்தியதாகவும் இதற்காக பெருந்தொகைப் பணம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.