Breaking
Sun. Dec 22nd, 2024

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட உள்வாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று 01.08.2019 மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் அரசாங்க அதிபர் உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது .

நிகழ்வில் விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன் ,ஸ்ரீநேசன் , உதவி அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரீகாந், மேலதிக அரசாங்க அதிபர் முகுந்தன், திட்டமிடல் பணிப்பாளர் திருமதி புண்ணிய மூர்த்தி மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

Related Post